Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program

Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsHome
சர்வதேச சிறுவர்,முதியோர்,மாற்றுவலுவுள்ளோர் தின விழா - 2019
சர்வதேச சிறுவர்,முதியோர்,விசேட தேவையுடையோர் தின விழா நெடுந்தீவு பிரதே செயலர் திரு. F .C . சத்தியசோதி தலைமையில், பிரதம விருந்தினர் திரு .திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன் ( ஆணையாளர் நன்னடத்தை சிறுவர் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் - வடக்கு மாகாணம் ) சிறப்பு விருந்தினர் திருமதி சிவகுமார் ( இயக்குனர் A . V .R அறக்கொடை அமைப்பு ) கெளரவ விருந்தினர் திரு.பொன்னுத்துரை தயாபரன் ( ஓய்வுபெற்ற தபாலதிபர் - நெடுந்தீவு தபாலகம் ) ஆகியோரின் சிறப்பு வருகையில்,முன்பள்ளி சிறார்கள் , பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள், முதியோர் கெளரவிப்பு மற்றும் பரிசில்கள் வழங்கல் நிகழ்வுகள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபதில் 23.10.2019 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்ற நிகழ்வுகளின் பதிவுகள்.
தேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01
தேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01
எமது பிரதேச செயலகத்தில் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக முன்றலில் போதை ஒழிப்பு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தும் நிகழ்வு 21.06.2019 அலுவலக உத்தியோகத்தர்களால் இடம்பெற்றது. இந்த சுவரொட்டிகள் கிராம சேவையாளர் பிரிவுகளில் காட்ச்சிப்படுத்தப்படுகின்றமையும் போதை ஒழிப்பு தொடர்பான வீதி நாடகம் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


பிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் - 25.06.2019
பிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் பிரதேச செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நெடுந்தீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர்.

2020ஆம் ஆண்டின் ஆரம்ப கடமை நடவடிக்கைகளை அரசாங்க சேவை சத்தியப்பிரமாணத்துடன் ஆரம்பிக்கும் நிகழ்வு
2020ஆம் ஆண்டின் ஆரம்ப கடமை நடவடிக்கைகளை அரசாங்க சேவை சத்தியப்பிரமாணத்துடன் ஆரம்பிக்கும் நிகழ்வு மதிப்பிற்குரிய பிரதேச செயலர் திரு.F.C.சத்தியசோதி அவர்களின் தலைமையின் ஆரம்ப நிகழ்வின் பதிவுகள்.
























