நெடுந்தீவு பிரதேசசெயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா கடந்த26.07.2024 அன்று தேவா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேசசெயலர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திருவாளர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
பண்பாட்டு விழாவில் கலைநிகழ்வுகள், கலைஞர் கெளரவிப்பு, நெடுங்கீற்று இதழ் வெளியீடு மற்றும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளுடன் விழா சிறப்புற இடம்பெற்றது.