இலங்கை மின்சாரம் வழங்கல் நம்பகத்தன்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள 3 தீவுகளில் (நயினாதீவு,நெடுந்தீவு,அனலைதீவு ), சிறிய தனிமைப்படுத்தப்பட்ட தீவுகள் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கான ஆக்கபூர்வமான சக்திப்பயன்பாடு தொடர்பான சமூக விளக்கக் காட்சிகள் மற்றும் ஆலோசனைகள். ⟰.திட்ட மேலோட்டம்: இந்த திட்டம் குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நெடுந்தீவு ,நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகியவற்றில் ஆக்கபூர்வமான சக்தி பயன்பாட்டை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது: ➥ ஆக்கபூர்வமான சக்திப்பயன்பாட்டின் மூலம் வருமானத்தை அதிகரிக்க நுண் ,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs ) செயல்படுத்துதல். ➥ வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க தொழில்நுட்ப மற்றும் திறன் பயிற்சி அளித்தல். ➥ மின்சாரம் மற்றும் மின் சாதனங்களின் பாதுகாப்பண மற்றும் வினைத்திறனான பயன்பாடு குறித்த பயிற்சி அளித்தல். ➥ பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் எரிசக்தி பயன்பாடு ஆகியவற்றில் பெண்களின் பங்கேற்பை உறுதி செய்தல். இந்த திட்டத்தில் பெண்கள் ,வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தேவைகள் குறித்து தனிப்பட்ட கவனம் செலுத்துதல். இடம் : நெடுந்தீவு பிரதேச செயலகம் , மாநாட்டு மண்டபம் . காலம் : சமூக விளக்கக் காட்சிகள் மற்றும் ஆலோசனைகள் :- 27 மற்றும் 28 ஜனவரி 2020 பொதுப் பயிற்சிகள் : 29,30 மற்றும் 31ஜனவரி 2020


















