நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு .F.C. சத்தியசோதி அவர்கள் தலைமையில் நிழல்தரு மரக்கன்றுகள் (புன்னை மற்றும் இலுப்பை மரக்கன்றுகள் ) பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புடன் 1000 நிழல்தரு மரக்கன்றுகள் நடுகை இலக்குடன் முதற்கட்டமாக 800 மரக்கன்றுகள் மணல்கிணற்று கடற்கரை,சன்னாங்குளம் ,நெ/சுப்பிரமணிய மகாவித்தியாலயம் ,பெருக்குமரத்தடி போன்ற பிரதேசங்களில் இன்றைய தினம்( 12.12.2019) நடுகை செய்யப்பட்டது.

 

மா , மாதுளை,தேசி ,தென்னை ,தேக்கு ,தோடை ,கொய்யா,முருங்கை ஆகிய மரக்கன்றுகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதேசமக்கள் உரிய முறையில் பராமரித்து சிறந்த பயனை பெற்றுக்கொள்வதற்கும் பசுமைநிறைந்த பிரதேசத்தினை கட்டியெழுப்புவதற்கும் இப்பிரதேச மக்களுடன் ஒன்றிணைந்த தலையாய கடமைப்பொறுப்பினை நெடுந்தீவு பிரதேச செயலகம் மேற் கொண்டுவருகிறது.

78707944 150027446334026 2318464032605995008 o 78815892 150027589667345 8209552200704196608 o 78992772 150027119667392 5523834903415750656 o 79420991 150027399667364 6760086014879858688 o

 

News & Event

23
Oct2026
நெடுந்தீவு பிரதேச செயலகம்  நடாத்திய மகளீர் தினம்

நெடுந்தீவு பிரதேச செ...

நெடுந்தீவு பிரதேச செயலகம் நேற்றைய தினம் நடாத்திய ( 27.03.2026 ) மகளீர் தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு வைத்திய அதிகாரி திருமதி . நிரோஷா...

23
Oct2026
கச்சதீவு அந்தோனியார் திருத்தல திருவிழா காலப்பகுதியில் நெடுந்தீவு - கச்சதீவு மற்றும் நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான சேவை குறித்த கலந்துரையாடல்

கச்சதீவு அந்தோனியார்...

இன்று பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது. பிரதேசசெயலர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையிலும் பிரதேசசபை உப தவிசாளர் கெளரவ ச. விமலதாஸ் அவர்களின் பிரசன்னத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவை சார்ந்த தனியார் படகு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். குறித்த திருவிழா காலப்பகுதிக்கான சேவைநேர ஒழுங்குகள்...

23
Oct2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது சுதந்திர தினம்.

இலங்கை ஜனநாயக சோசலிச...

நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை அனுஸ்ரிக்கும் விதமாக பிரதேச செயலாளர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பிரதேச...

23
Oct2026
நெடுந்தீவு கிராமிய இதயத் துடிப்பு வலுவூட்டல் நிலைய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நெடுந்தீவு கிராமிய இ...

 நிலையத்தின் இணைப்பாளர் பிருந்தா கந்தையா அவர்களின் தலைமையில் இன்று (30/01/2026) இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ந. பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு நிலையத்தினூடாக கடந்த வருடம் பாடநெறிகளை பூர்த்தி செய்த 52 மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்து வாழ்த்துக்களையும்...

23
Oct2026
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த விழாவிற்கான நிதி முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!

கச்சதீவு புனித அந்தோ...

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (27.01.2026) மு. ப. 11.00...

« »
Scroll To Top