நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு .F.C. சத்தியசோதி அவர்கள் தலைமையில் நிழல்தரு மரக்கன்றுகள் (புன்னை மற்றும் இலுப்பை மரக்கன்றுகள் ) பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புடன் 1000 நிழல்தரு மரக்கன்றுகள் நடுகை இலக்குடன் முதற்கட்டமாக 800 மரக்கன்றுகள் மணல்கிணற்று கடற்கரை,சன்னாங்குளம் ,நெ/சுப்பிரமணிய மகாவித்தியாலயம் ,பெருக்குமரத்தடி போன்ற பிரதேசங்களில் இன்றைய தினம்( 12.12.2019) நடுகை செய்யப்பட்டது.
மா , மாதுளை,தேசி ,தென்னை ,தேக்கு ,தோடை ,கொய்யா,முருங்கை ஆகிய மரக்கன்றுகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதேசமக்கள் உரிய முறையில் பராமரித்து சிறந்த பயனை பெற்றுக்கொள்வதற்கும் பசுமைநிறைந்த பிரதேசத்தினை கட்டியெழுப்புவதற்கும் இப்பிரதேச மக்களுடன் ஒன்றிணைந்த தலையாய கடமைப்பொறுப்பினை நெடுந்தீவு பிரதேச செயலகம் மேற் கொண்டுவருகிறது.














