யாழ்ப்பாணம் நலலூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம்,நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தினருடன் இணைந்து 25.11.2019 அன்று நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நெடுந்தீவு பாடசாலை மாணவர்களுக்கான உதவித் திட்டநிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
நெடுந்தீவு பாடசாலைகளில் கல்வி கற்கும் 200 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பை மற்றும் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் , முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் நெடுந்தீவு பிரதேசத்திற்கென ஒரு தொகுதி பயன் தரு மரக்கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நல்லூர் றோட்றிக் கழகத்தின் தலைவரும்,மதிப்பிற்குரிய வைத்திய அதிகாரி திரு.மகேசு பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் மதிப்பிற்குரிய திரு எம்.சிவகுமரன், கௌரவ விருந்தினராக நல்லூர் றோட்டறக்ட் கழகத்தின் ஆலோசகர்.கணநாதன் ரஜீவன், மற்றும் நெடுந்தீவு நண்பர்கள் வட்டத் தலைவர் திரு. ஜனேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
பல்வேறு இடர்ப் பாடுகளுக்கிடையிலும் நெடுந்தீவு பிரதேசத்தினை தெரிவு செய்து, நெடுந்தீவு மாணவர்களின் தேவையினை கருத்திற் கொண்டு அவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும்,எதிர்கால நெடுந்தீவு பிரதேச பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் பயன் தரு மரக்கன்றுகளை அன்பளிப்பாகவழங்கியும், கல்விச் செயற்பாட்டிற்கு வறுமை ஒரு தடையல்ல என்ற எண்ணக்கருவில் தொடர்ச்சியாக தங்களது கல்விக்கான ஒத்துழைப்பினை வழங்கிவரும் றோட்டறக்ட் கழக அங்கத்தவர்களுக்கும் அதன் தாய் கிளை உறுப்பினர்களுக்கும்,இதற்கான முழு ஆதரவினை நல் முறையில் வழங்கிய நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தினருக்கும் உங்களது சேவைகள் தொடர்ந்தும் நெடுந்தீவு பிரதேசத்தில் இடம்பெற நெடுந்தீவு பிரதேச செயலகம் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.













