2021ம் ஆண்டின் தைப்பொங்கல் நிகழ்வானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு. F. C சத்தியசோதி அவர்களது தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக முன்றலில் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஊழியர் நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சுகாதார நடைமுறைகளுக்கு இணங்க சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர், கணக்காளர்,சமுர்த்தி முகாமையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம நிலையதாரிகள், அலுவலக ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.