ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නNews & Event.
" அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தினமானது பிரதேசசெயலர் உயர்திரு எப்.சி.சத்தியசோதி அவர்களின் தலைமைத்துவத்துடனும் நெறிப்படுத்தலுக்கு அமைவாகவும் கடந்த 24/03/2023 அன்று இடம்பெற்றது.

உலக உணவுத்திட்டம், World Vision அமைப்புடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொருட்கள் முதல் நாளாக நேற்றைய தினம் (14/03/2023) வழங்கிவைக்கப்பட்டன.
மானிப்பாய் லியோ கழகத்தினரின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய இலவச சட்ட ஆலோசனை நிகழ்வு கடந்த 11.03.2023 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. பிரதேசசெயலர் உயர்திரு எப்.சி. சத்தியசோதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சட்டத்தரணிகள், மானிப்பாய் லியோ கழக அங்கத்தவர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

இலங்கை திருநாட்டின் 75 ஆவது தேசிய சுதந்திர தினம் நினைவுகூரப்படும் நிலையில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திலும் நினைவுகூரப்பட்டது. பிரதேசசெயலர் உயர்திரு எப்.சி சத்தியசோதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அலுவலக உத்தியோகத்தர்களும் இணைந்திருந்தனர். நாட்டின் தேசியக்கொடியேற்றல் நிகழ்வை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு பிரதேச செயலரினால் சுதந்திரதின வாழ்த்துரையும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
























