முதியோருக்கான தேசிய செயலகத்தின் "திரிய பியச" வீடமைப்புத் திட்டம்- எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எப்.சி.சத்தியசோதி அவர்களது தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், J/3 கிராம அலுவலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.













