banner

நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் 4 மணிவரை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந் நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும்இ இந் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ள திணைக்களங்களும் அவற்றின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளும் வருமாறு. 

 

திணைக்களங்கள்

 சேவைகள்

ஆவண விபரங்கள்

1.

நீதி அமைச்சின் - தொழிலாளர் தீர்ப்பாயம்,சமாதான நீதவான், தீடீர் மரண விசாரணை,
சத்திய பிரமாணத்திற்கான ஆணையாளர்,அகில இலங்கை மொழிபெயர்ப்பாளர் தொடர்பான சேவைகள்.

* தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிணக்குகள்

 வெளிநாட்டு அமைச்சின் மூலமான சத்தியபிரமாண சான்றளிப்பு pdfic2

2

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்

*  காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட முடியும்.

* காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான புதிய முறைப்பாடுகளை மேற்கொள்ள முடிவதுடன்,காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்கமுடியும்

 

3

சட்ட உதவி ஆணைக்குழு

* நிலுவையிலிருக்கும் ஏதேனும் வழக்குகள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

* ஏதேனும் வழக்கு ஒன்றை தொடர்வதற்கான சட்டத்தரணிகளின் சேவையினை பெற்றுக்கொள்ளல்.

 

4

இழப்பீட்டுக்கான அலுவலகம்
 

* புனர்வாழ்வு அதிகாரசபைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட பொதுமக்கள் சொத்திழப்பு, இறப்பு மற்றும் காயம் தொடர்பான கோவைகள், அரசாங்க ஊழியர் சொத்திழப்புக்குரிய கோவைகள் மற்றும் போரினால் சேதமடைந்த ஆலயங்களின் கோவைகள் தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட இதுவரை இழப்பீட்டை பெற்றுக்கொள்ளாதவர்களும்  மேலதிகமாக இவ் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்

* சுயதொழில் திட்டப் பயிற்சிநெறிகள்  தொடர்பான விபரங்களை இந் நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ளலாம்.

  pdfic2

5

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்

* இந் நிறுவனத்தினால் விழிப்புணர்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் சம்மந்தமான  செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

6

குற்றம் மற்றும் சாட்சியங்களினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதிகாரசபை
 

* குற்றச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சியங்கள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகளைப்  பெற்றுக்கொள்ளவதற்கான விசேட சாளரமொன்று திறக்கப்பட்டுள்ளதுடன்  அதற்கமைய அவர்கள் தமது பிரச்சினைகளை இவ்விடத்தில் முன்வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

* இத்திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 pdfic2

7

ஆட்பதிவுத் திணைக்களம்

* புதிய, புதுப்பித்தல் மற்றும் தொலைந்த அடையாள அட்டைகளை பெறுவதற்கு பூரணப்படுத்தப்பட்ட   

       விண்ணப்ப படிவத்தினை தொடர்புடைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும்

*   ஏற்கனவே பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை பெறுவதற்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளமுடியும்.

*   அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்குபவர்கள் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

 

8

பதிவாளர் நாயகத் திணைக்களம்

*   காலம்கடந்த பிறப்பு, இறப்புஇ திருமண பதிவுகளை உரிய ஆவணங்களுடன் சமூகமளித்து  சேவைகளை பெற்றுக்கொள்வதுடன் இது தொடர்பான  மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்

 

9

சமூகச் சீர்திருத்த அலுவலகம்

*   சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

 

10

மாகாணக் காணி ஆணையாளர் திணைக்களம்

* அரச காணிகள் தொடர்பில் காணி அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப்பத்திரம் தொடர்பிலான சேவைகளை பெற்றுக்கொள்ளல்.

*   அரச காணி தொடர்பில் ஏதேனும் பிணக்குகள் காணப்படின் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

 

11

மத்தியஸ்த சபை

* மத்தியஸ்தர் சபையினூடாக வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல். (துண்டுப்பிரசுரம் மற்றும் வீடியோ கண்காட்சி)

* ஏதேனும் பிணக்குகள் தொடர்பில் மத்தியஸ்தர் சபை தவிசாளரிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கமுடியும்.

 

12

சிறைச்சாலைத் திணைக்களம்

*   சிறைச்சாலை கைதிகள் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

*   சிறைச்சாலை அலுவலர்களுக்கான தொழில்தகைமை தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளல்

*   கைதிகளை நிகழ்நிலையில் பார்வையிடுவதற்கான அறிமுகம்

 

13

சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு

*   சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறும்.

 pdfic2

14

தொழில் பயிற்சி அதிகார சபை

*   தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் வழங்கப்படும் தொழில் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெறும்

 
மேலும் கடன் இணக்க சபைத் திணைக்களம் ,பனை அபிவிருத்தி சபை ,புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் ஆகிய நிறுவனங்களின் சேவைகளும் இந்நடமாடும் சேவையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

News & Event

18
සැප්2025
First meeting with the people of J/05 Division Delft Secretariat.

First meeting with t...

The first meeting of the Neduntheevu Divisional Secretary with the people of the Neduntheevu Central East (J/05) Grama Niladhari Division, as a first step in meeting all the people of...

05
දෙසැ2024
மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை பிரதேசசெயலர்  அவர்கள் வழங்கிவைத்தார்.

மாணவர்களுக்கான துவிச...

வடமாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினூடாக நெடுந்தீவு கல்விக்கோட்ட பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை பிரதேசசெயலர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்கள் வழங்கிவைத்தார்.

05
දෙසැ2024
அனர்த்த நிலைமைகள் 26 November 2024

அனர்த்த நிலைமைகள் 26...

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பிரதேசசெயலகத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகின்றீர்கள். < < < <

05
දෙසැ2024

பொதுமக்களுக்கான நெடு...

பொதுமக்களுக்கான நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் அறிவித்தல் 2024 November 26 தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்ததினால் கடும் மழை மற்றும் காற்று காரணமாக இயல்புநிலை பாதிக்கப்படும். நெடுந்தீவு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மக்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்கு நெடுந்தீவு றோமன்...

05
දෙසැ2024

14 அக்டோபர் 2024க்கா...

14 அக்டோபர் 2024க்கான வானிலை முன்னறிவிப்பு / காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டதுமேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு...

05
දෙසැ2024
குதிரைகளுக்கு நீர் வழங்கும் செயற்திட்டம்

குதிரைகளுக்கு நீர் வ...

  வனஜீவராசிகள் திணைக்களத்தின் நிதிபங்களிப்புடன் நெடுந்தீவு பிரதேச செயலகந்தினால் முன்னெடுக்கப்படும் குதிரைகளுக்கு நீர் வழங்கும் செயற்திட்டம்

05
දෙසැ2024
 பண்பாட்டு விழா- 2024

பண்பாட்டு விழா- 2024

நெடுந்தீவு பிரதேசசெயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா கடந்த26.07.2024 அன்று தேவா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேசசெயலர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திருவாளர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம...

05
දෙසැ2024
உயர்திரு F.C சத்தியசோதி அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா

உயர்திரு F.C சத்தியச...

  நெடுந்தீவு பிரதேச செயலராக கடந்த ஆறு வருடங்கள் (2018.05.02 - 2024.04.19) மக்கள் மயப்படுத்தப்பட்ட சேவையை நெடுந்தீவு மக்களுக்காக வழங்கி யாழ் மாவட்ட சமுர்த்தி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று செல்லும் உயர்திரு F.C சத்தியசோதி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தீவிற்கு...

« »
Scroll To Top