எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வேலைத்திடட்டுமான "நாட்டுக்காக ஒன்றிணைவோம்"  நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலகம் மற்றும் "ஹியுமெடிகா" (HUMEDICA) நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் களரி நாடக ஆற்றுகை குழுவினரின் வீதி நாடகம் நெடுந்தீவு பிரதான வீதியில் பிரதேச செயலக முன்றலில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது இதில் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என 150 பேர் பங்குபற்றினார்கள்.

viber image 2019 06 24 12 01 29

viber image 2019 06 24 12 01 24

viber image 2019 06 24 12 01 31

viber image 2019 06 24 12 01 28

 

போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போதை ஒழிப்பு தொடர்பான கழுத்து பட்டி அணிந்து அலுவலக கடமைகளில் ஈடுபடுவதுடன் போதை ஒழிப்பு க்கு ஆதரவான செயட்பாடுகளில் ஈடுபட்டனர். காலை பிராத்தனையில்போது எமது கணக்காளர் போதை ஒழிப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார். இதன்போது எமது பிரதேச செயலக பிரிவில் சிகரெட்டினை முற்றாக தடை செய்வதற்கு பிரதேச கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடுவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது.

viber image 2019 06 24 10 25 23  viber image 2019 06 24 10 25 50  viber image 2019 06 24 10 19 03 

யாழ்ப்பாணம் நலலூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம்,நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தினருடன் இணைந்து 25.11.2019 அன்று நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நெடுந்தீவு பாடசாலை மாணவர்களுக்கான உதவித் திட்டநிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
நெடுந்தீவு பாடசாலைகளில் கல்வி கற்கும் 200 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பை மற்றும் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் , முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் நெடுந்தீவு பிரதேசத்திற்கென ஒரு தொகுதி பயன் தரு மரக்கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நல்லூர் றோட்றிக் கழகத்தின் தலைவரும்,மதிப்பிற்குரிய வைத்திய அதிகாரி திரு.மகேசு பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் மதிப்பிற்குரிய திரு எம்.சிவகுமரன், கௌரவ விருந்தினராக நல்லூர் றோட்டறக்ட் கழகத்தின் ஆலோசகர்.கணநாதன் ரஜீவன், மற்றும் நெடுந்தீவு நண்பர்கள் வட்டத் தலைவர் திரு. ஜனேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
பல்வேறு இடர்ப் பாடுகளுக்கிடையிலும் நெடுந்தீவு பிரதேசத்தினை தெரிவு செய்து, நெடுந்தீவு மாணவர்களின் தேவையினை கருத்திற் கொண்டு அவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும்,எதிர்கால நெடுந்தீவு பிரதேச பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் பயன் தரு மரக்கன்றுகளை அன்பளிப்பாகவழங்கியும், கல்விச் செயற்பாட்டிற்கு வறுமை ஒரு தடையல்ல என்ற எண்ணக்கருவில் தொடர்ச்சியாக தங்களது கல்விக்கான ஒத்துழைப்பினை வழங்கிவரும் றோட்டறக்ட் கழக அங்கத்தவர்களுக்கும் அதன் தாய் கிளை உறுப்பினர்களுக்கும்,இதற்கான முழு ஆதரவினை நல் முறையில் வழங்கிய நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தினருக்கும் உங்களது சேவைகள் தொடர்ந்தும் நெடுந்தீவு பிரதேசத்தில் இடம்பெற நெடுந்தீவு பிரதேச செயலகம் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.

 

News & Event

23
அக்2026
நெடுந்தீவு  பிரதேச செயலக பொங்கல் நிகழ்வு .

நெடுந்தீவு பிரதேச செ...

அனைத்து உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் ஊழியர் நலன்புரி சங்கமும் இணைந்து மிக விமர்சையாக நடாத்திய பிரதேச செயலக பொங்கல் நிகழ்வானது 2026.01.19 இன்று காலை பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது . p>< <

23
அக்2026
 கச்சதீவிற்கு பக்தர்களுடன் பயணிக்கும் படகுகளுக்கான  படகுகளுக்கான தரப் பரிசோதனை

கச்சதீவிற்கு பக்தர்க...

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா வருகின்ற மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கச்சதீவிற்கு பக்தர்களுடன் பயணிக்கும் படகுகளுக்கான தரப் பரிசோதனை நடாத்தப்படவுள்ளது. கப்பல் கட்டும் வாணிப துறையினரால் வருகின்ற மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற...

23
அக்2026
வீட்டுத்திட்ட பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான கூட்டம்

வீட்டுத்திட்ட பயனாளி...

நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் 2026ம் ஆண்டிற்கான வீட்டுத்திட்ட பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான கூட்டம் பிரதேசசெயலர் தலைமையில் இன்று (13 / செவ்வாய்) காலை இடம்பெற்றது. திட்டத்தில் பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களையும் குறித்த திட்டத்தின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பான விளக்கத்தினையும் பிரதேசசெயலர் இதன்போது வழங்கினார்....

23
அக்2026
சமூக பாதுகாப்புச் சபையின் 2025ம் ஆண்டு தேசிய ரீதியில் பணப் சேகரிப்பில் தொடர்ச்சியான சாதனையாக 13வது வருடமாகவும் யாழ்ப்பாண மாவட்டம் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டது.

சமூக பாதுகாப்புச் சப...

இவ் அடைவு மட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு உதவிய, எமது பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு.சகாயநாதன் ஜனார்த்தனன் அவர்களுக்கு, அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (06.01.2026) இடம்பெற்ற நிகழ்வில் பாராட்டுப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.. குறித்த...

23
அக்2026
நெடுந்தீவு பிரதேசத்தில் விசக்கடிக்கு உள்ளான நபர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி வரவழைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு இன்று மாலை அழைத்துச்செல்லப்பட்டார்.

நெடுந்தீவு பிரதேசத்த...

நாட்டில் நிலவும் மழையுடன்கூடிய காலநிலையால் உண்டான கடல் கொந்தழிப்பு காரணமாக நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான கடல்வழி போக்குவரத்து இன்றைய தினம் முற்றாக தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், கடல்வழி அம்புலன்ஸ் விரைவு படகும் பயணிக்க முடியாத நிலையில் விமானப்படையின் உலங்கு வானூர்தியை வரவழைக்கும்...

23
அக்2026
நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உதவி பிரதேச செயலாளர் நியமனம்

நெடுந்தீவு பிரதேச செ...

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட சிவதுரை றஜிந்தன் அவர்கள் இன்றைய தினம் (05.01.2026) தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய உதவி பிரதேசசெயலரை அன்புடன் வரவேற்று மகிழ்வதோடு அவரது பணி சிறப்புற அமைய வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கின்றோம். புதிய உதவி...

« »
Scroll To Top