தேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01
எமது பிரதேச செயலகத்தில் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக முன்றலில் போதை ஒழிப்பு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தும் நிகழ்வு 21.06.2019 அலுவலக உத்தியோகத்தர்களால் இடம்பெற்றது. இந்த சுவரொட்டிகள் கிராம சேவையாளர் பிரிவுகளில் காட்ச்சிப்படுத்தப்படுகின்றமையும் போதை ஒழிப்பு தொடர்பான வீதி நாடகம் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.























