
பொலீசாரால் ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டணப் பேரணி
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலாளருக்கு பொலீசாரால் ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று 08.08.2022 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு எமது நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலில் எதிர்ப்பு அடையாள போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது எமது பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும்கிராம மட்ட உத்தியோகத்தர்கள், அலுவலகஉத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.











