
75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு - 2023
இலங்கை திருநாட்டின் 75 ஆவது தேசிய சுதந்திர தினம் நினைவுகூரப்படும் நிலையில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திலும் நினைவுகூரப்பட்டது. பிரதேசசெயலர் உயர்திரு எப்.சி சத்தியசோதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அலுவலக உத்தியோகத்தர்களும் இணைந்திருந்தனர். நாட்டின் தேசியக்கொடியேற்றல் நிகழ்வை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு பிரதேச செயலரினால் சுதந்திரதின வாழ்த்துரையும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.











