
இலவச சட்ட ஆலோசனை நிகழ்வு -2023
மானிப்பாய் லியோ கழகத்தினரின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய இலவச சட்ட ஆலோசனை நிகழ்வு கடந்த 11.03.2023 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. பிரதேசசெயலர் உயர்திரு எப்.சி. சத்தியசோதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சட்டத்தரணிகள், மானிப்பாய் லியோ கழக அங்கத்தவர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.











