நெடுந்தீவு பிரதேச செயலகம் நேற்றைய தினம் நடாத்திய ( 27.03.2026 ) மகளீர் தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு வைத்திய அதிகாரி திருமதி . நிரோஷா சஜிசயன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மகளிர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் போட்டி நிகழ்வுகளுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் திருமதி. ந.சுதர்மினி அவர்களும், நெடுந்தீவு வசப கடற்படை கட்டளை அதிகாரி N. ரணவீர RSP, USP, PSP அவர்களும், நெடுந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி கோ. பாமினி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
<
<











