ஜனாதிபதி செயலகம் மற்றும் முதியோர் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரியானது நெடுந்தீவையும் வந்தடைந்தது. 1890 என்ற முதியோர் உதவிச் சேவைக்கான அவசர தொலைபேசி இலக்கத்தைப் பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்துதல், Clean Sri Lanka திட்டத்தை ஊக்குவித்தல், முதியவர்கள் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தல் போன்ற பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி, இக்குழுவினர் கடந்த 01ஆம் திகதி கொழும்பிலிருந்து தமது சைக்கிள் சவாரியை ஆரம்பித்து 2026.10.12 அன்று நெடுந்தீவை வந்தடைந்த இக்குழுவினர் நெடுந்தீவு மாவலித்துறைமுகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் வரவேற்கப்பட்டு தொடர்ந்து நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய முன்றலில் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றது. இச்சைக்கிள் சவாரியில் பங்கேற்ற முதியவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு.க.இளங்குமரன், மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.ந.பிரபாகரன், உதவிப் பிரதேச செயலாளர், நெடுந்தீவு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நெடுந்தீவு முதியோர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் பராம்பரிய கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் மாட்டுவண்டில் சகிதம் பொதுமக்களும் இணைந்திருந்தனர்.
<

<






















