நெடுந்தீவு பிரதேச செயலரது நெடுந்தீவு பிரதேச வாழ் அனைத்து மக்களையும் கிராம அலுவர் பிரிவினூடாக சந்திப்பதன் முதற்கட்டமாக நெடுந்தீவு மத்தி கிழக்கு (J/05) கிராம அலுவலர் பிரிவின் மக்களுடனான முதல் சந்திப்பானது சென்.அன்ரனீஸ் சனசமூக நிலையத்தில் பிரதேச செயலர் உயர்திரு N.பிரபாகரன் அவர்கள் தலைமையில் 15.09.2025 (திங்கட்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேசசபை தவிசாளர், உதவித் தவிசாளர், (J/05) கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும்
சமூர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
வடமாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினூடாக நெடுந்தீவு கல்விக்கோட்ட பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை பிரதேசசெயலர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்கள் வழங்கிவைத்தார்.

பொதுமக்களுக்கான நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் அறிவித்தல் 2024 November 26
தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்ததினால் கடும் மழை மற்றும் காற்று காரணமாக இயல்புநிலை பாதிக்கப்படும். நெடுந்தீவு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மக்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்கு நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை, சுப்ரமணிய வித்தியாலயம், சைவப்பிராகச வித்தியாலயம் ஆகியன தற்காலிக முகாமாக தயார்செய்யப்பட்டுள்ளன என்பதனை பொதுமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.பொது மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்குவதற்கு தேவையேற்படின் உங்கள் பிரிவிற்கான கிராம அலுவலரைத் தொடர்புகொண்டு தங்கள் அருகில் உள்ள பாடசாலைக்கு செல்ல முடியும்.
அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பிரதேசசெயலகத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
<
<
<
<
14 அக்டோபர் 2024க்கான வானிலை முன்னறிவிப்பு / காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டதுமேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100mm க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.DMC, 117க்கு அழைக்கவும்.















