Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program

Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsHome
போதை ஒழிப்பு வீதி நாடகம் - 2019
போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலகம் மற்றும் "ஹியுமெடிகா" (HUMEDICA) நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் களரி நாடக ஆற்றுகை குழுவினரின் வீதி நாடகம் நெடுந்தீவு பிரதான வீதியில் பிரதேச செயலக முன்றலில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது இதில் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என 150 பேர் பங்குபற்றினார்கள்.




தேசிய போதை ஒழிப்பு வாரம்
போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போதை ஒழிப்பு தொடர்பான கழுத்து பட்டி அணிந்து அலுவலக கடமைகளில் ஈடுபடுவதுடன் போதை ஒழிப்பு க்கு ஆதரவான செயட்பாடுகளில் ஈடுபட்டனர். காலை பிராத்தனையில்போது எமது கணக்காளர் போதை ஒழிப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார். இதன்போது எமது பிரதேச செயலக பிரிவில் சிகரெட்டினை முற்றாக தடை செய்வதற்கு பிரதேச கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடுவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது.
நெடுந்தீவு பாடசாலை மாணவர்களுக்கான உபகரணம் வழங்கல்-Rotaract Nallur
யாழ்ப்பாணம் நலலூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம்,நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தினருடன் இணைந்து 25.11.2019 அன்று நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நெடுந்தீவு பாடசாலை மாணவர்களுக்கான உதவித் திட்டநிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
நெடுந்தீவு பாடசாலைகளில் கல்வி கற்கும் 200 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பை மற்றும் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் , முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் நெடுந்தீவு பிரதேசத்திற்கென ஒரு தொகுதி பயன் தரு மரக்கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நல்லூர் றோட்றிக் கழகத்தின் தலைவரும்,மதிப்பிற்குரிய வைத்திய அதிகாரி திரு.மகேசு பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் மதிப்பிற்குரிய திரு எம்.சிவகுமரன், கௌரவ விருந்தினராக நல்லூர் றோட்டறக்ட் கழகத்தின் ஆலோசகர்.கணநாதன் ரஜீவன், மற்றும் நெடுந்தீவு நண்பர்கள் வட்டத் தலைவர் திரு. ஜனேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
பல்வேறு இடர்ப் பாடுகளுக்கிடையிலும் நெடுந்தீவு பிரதேசத்தினை தெரிவு செய்து, நெடுந்தீவு மாணவர்களின் தேவையினை கருத்திற் கொண்டு அவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும்,எதிர்கால நெடுந்தீவு பிரதேச பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் பயன் தரு மரக்கன்றுகளை அன்பளிப்பாகவழங்கியும், கல்விச் செயற்பாட்டிற்கு வறுமை ஒரு தடையல்ல என்ற எண்ணக்கருவில் தொடர்ச்சியாக தங்களது கல்விக்கான ஒத்துழைப்பினை வழங்கிவரும் றோட்டறக்ட் கழக அங்கத்தவர்களுக்கும் அதன் தாய் கிளை உறுப்பினர்களுக்கும்,இதற்கான முழு ஆதரவினை நல் முறையில் வழங்கிய நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தினருக்கும் உங்களது சேவைகள் தொடர்ந்தும் நெடுந்தீவு பிரதேசத்தில் இடம்பெற நெடுந்தீவு பிரதேச செயலகம் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.
பாடசாலை மாணவர்களுக்கு "குழந்தைகளின் உலகம் - முதியோர்கள் " என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு செயலமர்வு
பாடசாலை மாணவர்களுக்கு "குழந்தைகளின் உலகம் - முதியோர்கள் " என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு செயலமர்வு 14.11.2019 ஆம் திகதி நெடுந்தீவு றோ .க.மகளீர் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூக சேவைகள் உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் றோ.க.மகளீர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் வழிநடத்தலில் , நெடுந்தீவு மத்தி றோமன் கத்தோலிக்க மகளீர் வித்தியாலய மாணவர்கள் மற்றும் சைவப்பிரகாச தரம் - 5 மாணவர்கள் முதல் தரம் - 8 வரையான மாணவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.
➤ முதியோர்கள் தொடர்பான சமூகத்தின் பொறுப்பு
➤ முதியோர் ஆரோக்கியம் மற்றும் நன்மதிப்பு
➤ முதியோர் பராமரிப்பில் சிறார்களின் பங்களிப்பு
போன்ற விடயங்கள் தொடர்பில்
➥ நெடுந்தீவு பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர்
➥ மனிதவளப் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும்
➥ பிரதேச கலாசார பிரிவு உத்தியோகத்தர்
ஆகியோர் இவ் விழிப்புணர்வு செயலமர்வினை திறம்பட நடாத்தியிருந்தனர்.



























