

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் உதவி அவசியமான கலைஞர்களுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டத்தில் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் வாழ்ந்துவரும் கலைஞர் கலாபூசணம் திரு.சைமன் ஜேசுதாசன் அவர்களுக்கான காசோலையினை மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.F.C. சத்தியசோதி அவர்கள் வழங்கி வைத்தார்.
முதியோருக்கான தேசிய செயலகத்தின் "திரிய பியச" வீடமைப்புத் திட்டம்- எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எப்.சி.சத்தியசோதி அவர்களது தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், J/3 கிராம அலுவலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விவசாயப் பொருட்களுக்கு பொருத்தமான விலையைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு குறைந்தவிவசாயப் பொருட்களுக்கு பொருத்தமான விலையைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு குறைந்தவிலையில் பொருட்களை வழங்குவதற்குமாக பொருளாதார மத்திய நிலையமானது மட்டுவில்யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான விண்ணப்பங்கள் 2022 தை மாதம் 31ம் திகதி தொடக்கம் மாசி மாதம் 3ம் இது சம்பந்தமான விண்ணப்பங்கள் 2022 தை மாதம் 31ம் திகதி தொடக்கம் மாசி மாதம் 3ம்திகதி வரையுள்ள காலப்பகுதியில் 9.00 மணி தொடக்கம் 2.30 மணிவரை யாழ்ப்பாணமாவட்டச் செயலகத்தில் மீள வழங்கப்படாத ரூபாய் 500.00 இனை செலுத்தி பெறப்படவேண்டும்.
விண்ணப்பபடிவத்தை தரவிறக்கம் செய்ய













