நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் வாணி விழா நிகழ்வின் பதிவுகள்
Read more: நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் வாணி விழா நிகழ்வின் பதிவுகள்
நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு .F.C. சத்தியசோதி அவர்கள் தலைமையில் நிழல்தரு மரக்கன்றுகள் (புன்னை மற்றும் இலுப்பை மரக்கன்றுகள் ) பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புடன் 1000 நிழல்தரு மரக்கன்றுகள் நடுகை இலக்குடன் முதற்கட்டமாக 800 மரக்கன்றுகள் மணல்கிணற்று கடற்கரை,சன்னாங்குளம் ,நெ/சுப்பிரமணிய மகாவித்தியாலயம் ,பெருக்குமரத்தடி போன்ற பிரதேசங்களில் இன்றைய தினம்( 12.12.2019) நடுகை செய்யப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு "குழந்தைகளின் உலகம் - முதியோர்கள் " என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு செயலமர்வு 14.11.2019 ஆம் திகதி நெடுந்தீவு றோ .க.மகளீர் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூக சேவைகள் உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் றோ.க.மகளீர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் வழிநடத்தலில் , நெடுந்தீவு மத்தி றோமன் கத்தோலிக்க மகளீர் வித்தியாலய மாணவர்கள் மற்றும் சைவப்பிரகாச தரம் - 5 மாணவர்கள் முதல் தரம் - 8 வரையான மாணவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.
➤ முதியோர்கள் தொடர்பான சமூகத்தின் பொறுப்பு
➤ முதியோர் ஆரோக்கியம் மற்றும் நன்மதிப்பு
➤ முதியோர் பராமரிப்பில் சிறார்களின் பங்களிப்பு
போன்ற விடயங்கள் தொடர்பில்
➥ நெடுந்தீவு பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர்
➥ மனிதவளப் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும்
➥ பிரதேச கலாசார பிரிவு உத்தியோகத்தர்
ஆகியோர் இவ் விழிப்புணர்வு செயலமர்வினை திறம்பட நடாத்தியிருந்தனர்.
யாழ்ப்பாணம் நலலூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம்,நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தினருடன் இணைந்து 25.11.2019 அன்று நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நெடுந்தீவு பாடசாலை மாணவர்களுக்கான உதவித் திட்டநிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
நெடுந்தீவு பாடசாலைகளில் கல்வி கற்கும் 200 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பை மற்றும் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் , முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் நெடுந்தீவு பிரதேசத்திற்கென ஒரு தொகுதி பயன் தரு மரக்கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நல்லூர் றோட்றிக் கழகத்தின் தலைவரும்,மதிப்பிற்குரிய வைத்திய அதிகாரி திரு.மகேசு பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் மதிப்பிற்குரிய திரு எம்.சிவகுமரன், கௌரவ விருந்தினராக நல்லூர் றோட்டறக்ட் கழகத்தின் ஆலோசகர்.கணநாதன் ரஜீவன், மற்றும் நெடுந்தீவு நண்பர்கள் வட்டத் தலைவர் திரு. ஜனேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
பல்வேறு இடர்ப் பாடுகளுக்கிடையிலும் நெடுந்தீவு பிரதேசத்தினை தெரிவு செய்து, நெடுந்தீவு மாணவர்களின் தேவையினை கருத்திற் கொண்டு அவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும்,எதிர்கால நெடுந்தீவு பிரதேச பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் பயன் தரு மரக்கன்றுகளை அன்பளிப்பாகவழங்கியும், கல்விச் செயற்பாட்டிற்கு வறுமை ஒரு தடையல்ல என்ற எண்ணக்கருவில் தொடர்ச்சியாக தங்களது கல்விக்கான ஒத்துழைப்பினை வழங்கிவரும் றோட்டறக்ட் கழக அங்கத்தவர்களுக்கும் அதன் தாய் கிளை உறுப்பினர்களுக்கும்,இதற்கான முழு ஆதரவினை நல் முறையில் வழங்கிய நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தினருக்கும் உங்களது சேவைகள் தொடர்ந்தும் நெடுந்தீவு பிரதேசத்தில் இடம்பெற நெடுந்தீவு பிரதேச செயலகம் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.
சர்வதேச சிறுவர்,முதியோர்,விசேட தேவையுடையோர் தின விழா நெடுந்தீவு பிரதே செயலர் திரு. F .C . சத்தியசோதி தலைமையில், பிரதம விருந்தினர் திரு .திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன் ( ஆணையாளர் நன்னடத்தை சிறுவர் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் - வடக்கு மாகாணம் ) சிறப்பு விருந்தினர் திருமதி சிவகுமார் ( இயக்குனர் A . V .R அறக்கொடை அமைப்பு ) கெளரவ விருந்தினர் திரு.பொன்னுத்துரை தயாபரன் ( ஓய்வுபெற்ற தபாலதிபர் - நெடுந்தீவு தபாலகம் ) ஆகியோரின் சிறப்பு வருகையில்,முன்பள்ளி சிறார்கள் , பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள், முதியோர் கெளரவிப்பு மற்றும் பரிசில்கள் வழங்கல் நிகழ்வுகள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபதில் 23.10.2019 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்ற நிகழ்வுகளின் பதிவுகள்.
















