நெடுந்தீவில் நவீன தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட EDOTCO நிறுவனத்தின் 5G Smart Lamp Pole திறப்பு விழா, நேற்றைய தினம் (12.10.2026) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு.க.இளங்குமரன், மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.ந.பிரபாகரன், EDOTCO நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். நெடுந்தீவின் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்துவதற்கும் இத்திட்டம் ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைகின்றது. இத்தகைய நவீன தொழில்நுட்ப வசதிகள் தீவக மக்களின் தொடர்பாடல் வசதிகளை மேம்படுத்துவதுடன், அரச நிறுவனங்களின் சேவைகள், மாணவர்களின் இணையவழிக் கல்விச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால டிஜிட்டல் வளர்ச்சி ஆகியவற்றுக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<


















