எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

இவ் அடைவு மட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு உதவிய, எமது பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு.சகாயநாதன் ஜனார்த்தனன் அவர்களுக்கு, அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (06.01.2026) இடம்பெற்ற நிகழ்வில் பாராட்டுப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.. குறித்த கெளரவம் வழங்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வட மாகாண சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு.பா.பிரதீபன், பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் பங்குபற்றினார்கள்.


1

நாட்டில் நிலவும் மழையுடன்கூடிய காலநிலையால் உண்டான கடல் கொந்தழிப்பு காரணமாக நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான கடல்வழி போக்குவரத்து இன்றைய தினம் முற்றாக தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், கடல்வழி அம்புலன்ஸ் விரைவு படகும் பயணிக்க முடியாத நிலையில் விமானப்படையின் உலங்கு வானூர்தியை வரவழைக்கும் ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டது. நோயாளரை விரைந்து அனுப்பிவைப்பதில் நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் முன்னெடுத்த ஏற்பாடுகளில் பிரதேசசெயலர் மற்றும் உதவி பிரதேசசெயலர் ஆகியோர் இணைந்திருந்தனர். மேலும் இவ்வாறான சீரற்ற காலநிலைகள் நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதேச மக்களை அவதானமாக செயற்படுமாறு பிரதேசசெயலர் அறிவுறுத்துகின்றார்.

p><1 <2

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட சிவதுரை றஜிந்தன் அவர்கள் இன்றைய தினம் (05.01.2026) தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய உதவி பிரதேசசெயலரை அன்புடன் வரவேற்று மகிழ்வதோடு அவரது பணி சிறப்புற அமைய வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கின்றோம். புதிய உதவி பிரதேசசெயலர் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடமிருந்து தனக்கான நியமனக் கடிதத்தினைப் கடந்த 02.01.2026 அன்று பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


1

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடு பூராகவும் நடாத்தபடும் தேசிய இலக்கிய போட்டிகளில் நெடுந்தீவு பிரதேசத்தை சார்ந்த இளம் எழுத்தாளர் திரு ஜேசுதாசன் ஜீவராஜ். அவர்கள் சிறுகதை ஆக்க படைப்பில் மாவட்டமட்டத்தில் இரண்டாம் இடத்தை தனதாக்கினார். கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தபடும் தேசிய இலக்கிய போட்டிகளில் முதல்கட்டமாக பிரதேசமட்டத்திலும் இரண்டாம் கட்டமாக மாவட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தேசியமட்டத்திலும் போட்டிகள் நடாத்தப்படும். அந்த வகையில் பிரதேசமட்ட போட்டிக்காக திரு ஜேசுதாசன் ஜீவராஜ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட "முடிச்சுக்கள்" என்ற சிறுகதை திறந்த பிரிவில் பிரதேசமட்டத்தில் முதலாம் இடத்தினையும் மாவட்டமட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுகொண்டது. இதனை எழுதிய இளம் எழுத்தாளர் திரு ஜேசுதாசன் ஜீவராஜ் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

<1

News & Event

23
அக்2026
சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் நெடுந்தீவுக்கு விஜயம்

சுற்றுச்சூழல் அமைச்ச...

“கிளீன் ஐலண்ட்” திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் சுற்றுச்சூழல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் 16.10.2026 அன்று நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, இலங்கையில் முன்னெடுக்கப்படும் “கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) திட்டத்தின்...

23
அக்2026
உள்ளக அலுவல்கள் பிரிவு – பொதுமக்களுக்கான முறைப்பாட்டு பொறிமுறை

உள்ளக அலுவல்கள் பிரி...

பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு (Internal Affairs Unit – IAU) முறைப்பாட்டு பொறிமுறை செயற்பாட்டிலுள்ளது. அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்,ஊழல் அல்லது...

23
அக்2026
மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மூன்றாம் காலாண்டு கண...

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம் இன்று (2026.10.15) காலை 10.00 மணிக்கு மதிப்பிற்குரிய...

23
அக்2026
முன்பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவுத் திட்டத்தினை கண்காணித்தல்

முன்பள்ளிச் சிறார்கள...

முன்பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவுத் திட்டத்தினை கண்காணித்தல் நெடுந்தீவு பிரதேச முன்பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவு வழங்கும் திட்டத்தின் செயற்பாடுகளை உதவிப் பிரதேச செயலாளர் அவர்கள் இன்றைய தினம் (2026.10.14) நேரில் சென்று பார்வையிட்டார். முன்பள்ளிச் சிறார்களின் ஆரோக்கியம் மற்றும் போசாக்கு நிலையை மேம்படுத்தும்...

23
அக்2026
சுற்றுலா சேவை வழிகாட்டி (Site Guide) பயிற்சி நெறி

சுற்றுலா சேவை வழிகாட...

சுற்றுலா சேவை வழிகாட்டி (Site Guide) பயிற்சி நெறி - முதலாம் நாள் ​வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டின் கீழ் வடபகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 07 நாள் சிறப்புப் பயிற்சிநெறி (Site Guide Training) இன்றைய தினம்(2026.10.14) உதவிப் பிரதேச...

23
அக்2026
முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரி - 2026

முதியோர் பசுமை நல்லி...

ஜனாதிபதி செயலகம் மற்றும் முதியோர் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரியானது நெடுந்தீவையும் வந்தடைந்தது. 1890 என்ற முதியோர் உதவிச் சேவைக்கான அவசர தொலைபேசி இலக்கத்தைப் பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்துதல், Clean Sri Lanka...

23
அக்2026
மாற்றுத்திறனாளிகளுக்கான மீளாய்வு அறிவித்தல்

மாற்றுத்திறனாளிகளுக்...

மாற்றுத்திறனாளிகளின் கொடுப்பனவினை பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் பின்வரும் ஆவணங்களுடன் எதிர்வரும் 2026.11.02 திங்கட்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள மீளாய்வில் தவறாது கலந்து கொள்ளவும். 01) 06 மாதங்களுக்குள் பெறப்பட்ட மருத்துவச்சான்றிதழ்கள் 02) அடையாள அட்டை 03) குடும்ப பதிவு அட்டை மீளாய்வில்...

23
அக்2026
"EDOTCO Smart Pole Tower திறப்பு விழா"

"EDOTCO Smart P...

நெடுந்தீவில் நவீன தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட EDOTCO நிறுவனத்தின் 5G Smart Lamp Pole திறப்பு விழா, நேற்றைய தினம் (12.10.2026) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு.க.இளங்குமரன்,...

« »
Scroll To Top