முன்பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவுத் திட்டத்தினை கண்காணித்தல் நெடுந்தீவு பிரதேச முன்பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவு வழங்கும் திட்டத்தின் செயற்பாடுகளை உதவிப் பிரதேச செயலாளர் அவர்கள் இன்றைய தினம் (2026.10.14) நேரில் சென்று பார்வையிட்டார். முன்பள்ளிச் சிறார்களின் ஆரோக்கியம் மற்றும் போசாக்கு நிலையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் சிறார்களுக்கு வழங்கப்படும் காலையுணவின் தரம் மற்றும் திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது அவதானிக்கப்பட்டன. சிறார்களுக்கு முறையானதும் போசாக்கு நிறைந்ததுமான காலையுணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இக் களத்தரிசிப்பு இடம்பெற்றது. சிறார்களின் ஆரோக்கியமான வளர்ச்சி, உடல் மற்றும் உளநல மேம்பாடு, அத்துடன் சிறந்த கல்வி அடைவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இவ்வாறான போசாக்குத் திட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
<












