மக்களுடனான சந்திப்பு
நெடுந்தீவு பிரதேச செயலரது நெடுந்தீவு பிரதேச வாழ் அனைத்து மக்களையும் கிராம அலுவர் பிரிவினூடாக சந்திப்பதன் முதற்கட்டமாக நெடுந்தீவு மத்தி கிழக்கு (J/05) கிராம அலுவலர் பிரிவின் மக்களுடனான முதல் சந்திப்பானது சென்.அன்ரனீஸ் சனசமூக நிலையத்தில் பிரதேச செயலர் உயர்திரு N.பிரபாகரன் அவர்கள் தலைமையில் 15.09.2025 (திங்கட்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேசசபை தவிசாளர், உதவித் தவிசாளர், (J/05) கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும்
சமூர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.















